கல்லூரி மாணவிகள் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்கள்

82பார்த்தது
காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும், எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணியாற்ற காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வாய்ப்பு அளித்து வருகிறார். அந்த வகையில் இன்று வடமறைக்காடு காமராஜ் அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி தேவிபாலா மற்றும் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி சஞ்சிதா தேர்வு செய்யப்பட்டு இன்று முழுவதும் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அவர்களோடு இணைந்து இரண்டு மாணவிகளும் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்கள். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் இன்று மேற்கொள்ளப்படும் ஆய்வு கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வாகனத்தில் சென்று பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி