துறையூரில் புதிய யூனியன் அலுவலக கட்டிட பூமி பூஜை நிகழ்வு
திருச்சி மாவட்டம் துறையூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கான பூமிபூஜை நிகழ்வு நடைபெற்றது. ரூ.5.54 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் இந்த புதிய கட்டிடத்திற்கான பூமிபூஜை நிகழ்வில் கலந்துகொண்ட பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு அடிக்கல் நட்டுவைத்து பூமிபூஜையை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட சேர்மன் தர்மன்ராஜேந்திரன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.