லால்குடி - Lalgudi

மணப்பாறை: பூட்டிய வீட்டில் பற்றி எரிந்த தீ

மணப்பாறை: பூட்டிய வீட்டில் பற்றி எரிந்த தீ

திருச்சி மாவட்டம் மணப்பாறை பெஸ்டோ நகரை சேர்ந்தவர் சிவராஜா ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று  (டிசம்பர் 3) வழக்கம்போல் வீட்டில் இருந்தவர்கள் உணவகத்திற்கு சென்று இருந்த நிலையில் வீட்டிலிருந்து புகை வந்துள்ளது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பார்த்தபோது அங்கிருந்த குளிர்சாதன பெட்டி பற்றி எரிந்துள்ளது.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணப்பாறை தீயணைப்புத் துறை வீரர்கள் அருகில் இருந்தோர் உதவியுடன் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். குளிர்சாதன பெட்டி தீப்பற்றி அருகில் இருந்த மிக்ஸி அயன் பாக்ஸ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் நாசமானது. மேலும் வீட்டிலிருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களும் கருகியது.  இந்த விபத்து குறித்து வருவாய் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சுடு தண்ணீர் வைக்க பயன்படுத்திய எலக்ட்ரிக் சாதனத்தை அணைக்காமலே சென்றதாக கூறப்படுகிறது.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా