திருச்சி சமயபுரம் சொக்கலிங்கபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் மகன் தெப்பன் வயது 20 வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளி. இவருக்கு இதய நோய் இருந்து வந்துள்ளது. சம்பவம் நடந்த நேற்று1(டிச 21) வீட்டில் குளியலறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவருடைய தாய் அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சிகிச்சையில் இருந்து வந்த தெப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலின் பெயரில் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.