திருச்சி துறையூர் அருகே பச்சமலையில் வண்ணத்துப்பூச்சி இனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது சமீபத்திய கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டில் 15 இனங்களும், 2022-ம் ஆண்டில் 109 இனங்களும் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது 126 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மலைக்குன்றுகள் 175 வண்ணத்துப்பூச்சி இனங்களை கொண்டிருக்கும் ஆற்றல் கொண்டது. விரைவில் இந்த இலக்கை பச்சமலை எட்டும் என இயற்கை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.