துறையூர் அருகே தனியார் கல்லூரியில் சிமெண்ட் தூண்கள் அமைக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு பெட்டிகள் திருடிய 3 பேர் கைது.
துறையூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் சிமெண்ட் தூண்கள்(பில்லர்) அமைக்கப்பயன்படுத்தப்படும் இரும்பிலான பெட்டிகள் (காலம் பாக்ஸ்) திருடியதாக போலீஸாரால் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புத்தனாம்பட்டியில் உள்ள நேரு நினைவுக் கல்லூரியில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக வளாகத்தில் தூண்கள் (பில்லர்) அமைக்கப் பயன்படுத்தப்படும் இரும்பிலான பெட்டிகள் (காலம் பாக்ஸ்) வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 50 இரும்புப் பெட்டிகள் திருடு போனது தெரிந்தது. இதையடுத்து புலிவலம் போலீஸில் கல்லூரி மேனேஜர் ராதாகிருஷ்ணன் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரித்த போலீஸார் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான இரும்புப் பெட்டிகளை திருடியதாக புத்தனாம்பட்டி மூக்கப்பிள்ளைத் தெருவைச் சேர்ந்த குமார் மகன் லோகேஷ்(21), அதே ஊரில் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மருதுபாண்டியன் மகன் அபிமன்யூ(20), ஓமாந்தூரைச் சேர்ந்த பாலசுந்தரம் மகன் ரமேஷ்(22) ஆகிய மூவரையும் கைது செய்து துறையூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நர்மதாராணி முன்பு ஆஜர்படுத்தினர்.