புதுமைப் பெண் திட்டத்தை டிசம்பர் 30ஆம் தேதி தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் விரிவாக்கம் செய்யவிருக்கிறார். தற்போது, இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இதனை 30ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின், இனி அவர்களும் மாதம் ரூ.1000 கிடைக்கும்.