மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரில்லர் 'த்ரிஷ்யம்' திரைப்படத்தில் 3ஆம் பாகம் அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது. கலாட்டா தமிழுக்கு நடிகை சுஹாசினி அளித்த பேட்டியின் போது மோகன்லால் இதனை உறுதி செய்தார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வந்த 2ஆம் பாகமும் மிகுந்த வரவேற்பை பெற்று ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில், விரைவில் 3ஆம் பாகத்திற்கான பணிகளை தொடங்கவுள்ளதாக மோகன்லால் தெரிவித்துள்ளார். இயக்குநர் ஜீத்து ஜோசப் இதற்கான திரைக்கதையை தயார் செய்து வருகிறார்.