திருச்சி: நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் 40 லட்சம் மோசடி

54பார்த்தது
திருச்சி: நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் 40 லட்சம் மோசடி
திருச்சி வயலூர் சாலை அம்மையப்பன் நகர் 5வது தெருவை சேர்ந்த தனலட்சுமி இவர் நிலம் வாங்குவதற்காக பல நிலங்களில் நிலம் தேடி வந்துள்ளார். இந்நிலையில் திருவானைக்காவல் நடு கொண்டயம்பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனலட்சுமி இடம் ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு இடத்தை வாங்கித் தருவதாக கூறியுள்ளதாக தெரிகிறது.

இதை நம்பி தனலட்சுமி அவரிடம் 40 லட்சம் ரூபாய் பணத்தை நிலம் வாங்குவதற்காக கொடுத்துள்ளார். பணம் பெற்றுக் கொண்ட பிறகு கண்ணதாசன் இடமும் வாங்கித் தராமல் பெற்ற பணத்தை திரும்பி பெறாமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி