குடிநீர் தொட்டியில் வழிந்தோடும் கழிவுநீர்

84பார்த்தது
திருச்சியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட இபி ரோடு, முத்தழகு பிள்ளை தெரு, சந்துகடை, பெரிய கடைவீதி பகுதிகளில் உரிய மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் முத்தழகு பிள்ளைத் தெருவில் பொது குடிநீர் குழாய் தொட்டி உள்ளது. இதன் மூலம் மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் குழாய் தொட்டி அருகே பொது சாக்கடை உள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குடிநீர் தொட்டியில் வழிந்தோடி சென்றது. சாலை மட்டத்திற்கே தண்ணீர் தொட்டி இருப்பதால் கழிவுநீர் மற்றும் சகதி இதில் தேங்கி இருப்பது அப்பகுதி மக்களுக்கு சிரமத்தையும் அசௌகரித்தியும் ஏற்படுத்துகிறது.

மேலும் கழிவுநீர் குடிநீர் தொட்டியில் தேங்குவதால் கொசுப்புழுக்கள் உருவாகி நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுக்குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடமும், 19வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாதிக் பாட்சா விடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி