மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான் மோடிக்கும் எம்ஜிஆர்-க்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "அனைத்து மதத்தினரையும் சமமாகப் பார்த்தவர் எம்ஜிஆர் அவருடன் மோடியை ஒப்பிடலாமா? பாஜக கொள்கையே மதத்தால் பிரிவினையைத் தூண்டுவதுதான். எந்த நிலையிலும் எம்ஜிஆர்-ஐ மோடி உடன் ஒப்பிட முடியாது" என்று பேட்டியளித்துள்ளார்.