தெலங்கானா: ஹைதராபாத்தில் அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த சுரேகா என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காமரெட்டி மாவட்டம் சோமரம் தாண்டா பகுதியைச் சேர்ந்த இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. 2025 பிப்., 7ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், திடீரென தற்கொலை செய்தார். பிரேதப் பரிசோதனை நடைபெறும் காந்தி மருத்துவமனையில், இளம்பெண் சாவுக்கு நீதி கேட்டு ஜேஏசி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.