தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஊதிய உயர்வுக்காக கடந்த காலங்களில் என். ஹெச். எம் திட்ட இயக்குனர், டி. பி. எச் இயக்குனர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட துணை மற்றும் இணை இயக்குனர்கள், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலர், தமிழக முதல்வர் ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.
இயன்முறை மருத்துவர்கள் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட ஆரம்ப நிலை குறுக்கீட்டு மையங்கள், தொற்றா நோய் பிரிவு, முதியோர் நலப் பிரிவுகளில் எனா மொத்தம் 110 இயன்முறை மருத்துவர்களும், புறநகர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் 463 இயன்முறை மருத்துவர்களும் என ஒட்டுமொத்தமாக 573 பேர் பணியாற்றி வருகிறார்கள்.
மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ள காலிப் பணியிடங்களுக்கான தேர்வில், கொரோனா காலத்தில் பணியாற்றிய இயன்முறை மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க அரசாணை வெளியிட வேண்டுமென முழக்கம் எழுப்பினார்கள்.