கோபிசெட்டிபாளையம் முதுஷா வீதியில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் டீ கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த கடைக்கு நேற்று (டிச.03) இரவு மின்சாரம் இல்லாதபோது வந்த மர்ம நபர் ஒருவர் குழந்தைகள் விளையாடும் ரூ.110 பொம்மை நோட்டை கொடுத்து சில்லறை வாங்கிச்சென்றுள்ளார். மின்சாரம் வந்த பிறகு அது பொம்மை நோட்டு என்பதை அறிந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.