லால்குடி - Lalgudi

திருச்சி: வன உயிரினங்களை கடத்தி வந்த நபர் கைது

திருச்சி: வன உயிரினங்களை கடத்தி வந்த நபர் கைது

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகள் உடமைகளை வழக்கம் போல் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஆண் பயணியின் நடவடிக்கைகள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனே அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து சந்தேகம் வலுவடைந்த நிலையில் அந்த ஆண் பயணியின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் நுணுக்கமாக சோதனை செய்தனர்.  அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்த ஆண்பயணி தனது உடமையில் மறைத்து வெளிநாட்டு வனவிலங்கு இனங்களை கடத்தி வந்ததுதான். தொடர்ந்து அதிகாரிகள் அந்த உயிரினங்களை பறிமுதல் செய்தனர். இதில் பிளாஸ்டிக் டப்பாக்களில் மூன்று முதல் ஐந்து பல்லிகளை உயிருடன் அடைத்து கொண்டு வரப்பட்ட 52 பல்லி மற்றும் ஓணான் வகைகளை பறிமுதல் செய்ததுடன் அதனை கடத்தி வந்தது எப்படி என சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்கு இனங்களை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా