ஜார்கண்ட் மாநிலம் செராய்கேலா-கார்ஸ்வான் மாவட்டத்தில் கடந்த வாரம், 24 வயது பெண்ணை கொலை செய்த வழக்கில் அப்பெண்ணின் 19 வயது காதலனான கன்சிராம் முர்மு என்ற ராகுல் என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நவம்பர் 27ஆம் தேதி மாலை கார்காய் ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது உடலுறவுகொள்ள காதலியை ராகுல் அழைத்துள்ளார். இதற்கு காதலி மறுக்கவே கான்கிரீட் ஸ்லாப் கல்லால் அடித்து கொலை செய்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.