பாஜகவை கூட்டணியில் இணைத்துக்கொள்ள அதிமுக முயற்சி: முத்தரசன்

55பார்த்தது
திருச்சி உறையூரில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் மாநில நிா்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:

வரும் டிச. 26-இல் தொடங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவையும், நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவையும் சிறப்பாகக் கொண்டாடுவோம். அப்போது கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபட வலியுறுத்துவோம்.

பாதுகாப்புத் துறைக்கு தளவாடப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்கிறது. கோடிக் கணக்கான ரூபாய் வரிப்பணத்தில் உருவாக்கப்படும் விமான நிலையங்களை தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை. எனவே மத்திய அரசு தனியாா்மயக் கொள்கையைக் கைவிட வேண்டும்.

பூண்டு, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை உயா்ந்து கொண்டே செல்வதால் மாநில அரசே அவற்றைக் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும்.

பாஜகவை கூட்டணியில் இணைத்துக்கொள்ள அதிமுக முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஒத்த கருத்துள்ள இரு கட்சிகளும் கூட்டணி சேர வேண்டியதுதான். ஆனால் பாசிச பாஜக தமிழகத்தில் காலூன்றாத வகையில் எங்களது அரசியல் நிலைப்பாட்டை தோ்தல் நேரத்தில் அறிவிப்போம். உலகில் சோசலிசம்தான் சிறந்தது. திராவிடத்தையும் தமிழ்த் தேசியத்தையும் பற்றி மட்டுமே பேசியுள்ள நடிகா் விஜய்க்கு, சோசலிசம்தான் சிறந்தது எனச் சொல்லிக் கொடுங்கள் என்றாா் இரா. முத்தரசன்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி