பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சென்னை பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். அவர் பாதிக்கப்பட்டவர்களின் இடத்திற்கு செல்லாமல் அவர்களை வரவழைத்தது விமர்சனத்தை கிளப்பியது. இது குறித்து கருத்து தெரிவித்த சீமான், "விஜய் களத்திற்கு வந்தால் அவரை பார்க்க அதிக கூட்டம் வந்துவிடும், அதை சமாளிக்க வேண்டியதாக இருக்கும். நேரில் அழைத்தாவது உதவிய அவரின் எண்ணத்தை பாராட்ட வேண்டும்" என்றார்.