குன்னம் - Kunnam

பெரம்பலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்

பெரம்பலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நபர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்கிட சிறப்பு முகாம்கள் வட்டார வாரியாக நடைபெற உள்ளது. அதன்படி 24. 10. 2024 அன்று செட்டிக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 25. 10. 2024 அன்று அடைக்கம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 29. 10. 2024 அன்று மேலமாத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 05. 11. 2024 அன்று குன்னம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 07. 11. 2024 அன்று பெருமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 09. 11. 2024 அன்று முருக்கன்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 12. 11. 2024 அன்று வேப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 14. 11. 2024 அன்று லப்பைகுடிக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 16. 11. 2024 அன்று குரும்பலுார் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 19. 11. 2024 மற்றும் 20. 11. 2024 ஆகிய இரு நாட்கள் பெரம்பலுார் அரசு தலைமை மருத்துவமனையிலும் நடைபெறவுள்ளது. இது நாள் வரை தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத புதிய மாற்றுத்திறனாளிகள் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


பெரம்பலூர்