கத்திரிக்காய் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவது ஏன்?
காய்கறியாக மட்டும் இல்லாமல் சாம்பார், காரக் குழம்பு போன்றவற்றுக்கும் பக்க பலமாக இருப்பது கத்திரிக்காய். இதில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து உள்ளது. பல நன்மைகள் நிறைந்த கத்திரிக்காயை சாப்பிட்டதும் சிலருக்கு அரிப்பை ஏற்படுத்தும். கத்திரிக்காயில் அதிகப்படியான சோலனைன் மற்றும் ஹிஸ்டமின் இருக்கிறது. இதன் காரணமாகவே சரும அலர்ஜி, அரிப்பு ஏற்படுகிறது.