திமுக சார்பில் சென்னை ஆர்.கே.நகரில் எளியோர் எழுச்சி நாள் எனும் பெயரில் 48 இணையர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 17) திருமணம் நடத்தி வைத்தார். கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி என 30க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்கள், ரூ.25,000 ரொக்கம் வழங்கி வாழ்த்தினார். இதன்போது ஒரு மணப்பெண்ணுக்கு அவரின் தாய் தவறுதலாக தாலி கட்ட முயன்றார். இதை பார்த்து உதயநிதி ஷாக்காகி தடுத்தார்.