தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுகுறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவிற்கு நடிகை கஸ்தூரி என்ன தவறு செய்தார்?. மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும்போது கஸ்தூரியை மட்டும் தனிப்படை அமைத்து கைது செய்தது உள்நோக்கம் கொண்டது” என்றார்.