இந்திய வாகன சந்தையில் 2024 அக்டோபர் மாத கார் விற்பனை விவரங்கள் FADA வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபரில் 4,83,159 கார்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்தாண்டை விட 32.38% அதிகம். 2023 அக்டோபரில் 3,64,991 கார்களே விற்பனையாகின. வருடாந்திர விற்பனையில் மட்டுமின்றி, மாதாந்திர விற்பனையிலும் கார்கள் ஏற்றம் கண்டுள்ளது. கார் விற்பனையில் இந்த அக்டோபரில் மாருதி சுசுகி நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது.