ஆந்திரப் பிரதேச மாநிலம் வெள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனுஷா. இவர், நரசாராவ்பேட்டையில் உள்ள பாவனா என்ற கல்வி நிறுனத்தில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து அனுஷா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளி மாணவிகள் இடையே பேனா தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அனுஷா தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.