முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள சரவண பொய்கையில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து நேற்று (நவ., 16) முதல் விரதத்தை தொடங்கினர். அதேபோல் முருகனை தரிசனம் செய்வதற்காக பழனி, திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களும் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.