வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது சீக்ரெட் கோட் (secret code) என்னும் புதிய அப்டேட்டை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களது தனிப்பட்ட சாட்களை மற்றவர்கள் யாரும் பார்க்க முடியாதபடி பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். புதிய சீக்ரெட் கோட் வசதியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் தற்போது கிடைக்கிறது. சீக்ரெட் கோட் வசதி வாட்ஸ் அப் பயனர்களுக்கு கூடுதலான பாதுகாப்பை வழங்குகிறது.