டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலோட் ராஜினாமா செய்துள்ளார். ஆம் ஆத்மி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் விலகியுள்ளார். உள்துறை, போக்குவரத்து, ஐ.டி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் துறைகளை இவர் கவனித்து வந்தார். நேற்று கூட டெல்லியில் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் பஸ் டிப்போவை இவர் திறந்து வைத்திருந்தார். டெல்லியில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கைலாஷ் கெலாட் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.