தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி எழும்பூர் பெருநகர் நீதிமன்றத்தில் இன்று (நவ. 17) ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் போலீஸ் வாகனத்தில் கஸ்தூரி ஏறும் போது அரசியல் அராஜகம் ஒழிக.. நீதி வெல்லட்டும் என கத்தி கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் கஸ்தூரியை வாகனத்தில் ஏற்றி சென்றனர்.