வான்கோமைசின் என்கிற ஆன்டி பயாடிக் மருந்து ஸ்ரெப்டோகாக் உள்ளிட்ட பாக்டீரியாவை கொல்வதற்காக பயன்பட்டு வந்தது. இதை எலிகளிடம் சோதனை நடத்திய போது ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் உள்ளுறுப்பு சேதாரத்தை குறைப்பது தெரியவந்தது. அதாவது இதயத்தில் தசைகள் இறுகி, போதுமான ரத்தத்தை பாய்ச்ச இயலாத நிலைக்கு தள்ளப்படும் ‘ஹைப்பர்ட்ரோபிக் கார்டியோ மையோபதி’ என்ற நோய் குணமாவது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விஞ்ஞானிகள் மேற்கொண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.