உதகமண்டலம் - Ooty

கோத்தகிரியில் தூய ஆரோக்கிய அன்னை திருவிழா கோலாகலம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தூய ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் கடந்த வாரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தூய ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழாவானது நடைபெற்றது. காலை முதல் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது வேண்டுதலையின் நிறைவேற்றுமாறு கர்த்தரிடம் முறையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி பங்குத்தந்தை அமிர்தாஜ், தலைமையில் மற்றும் உதவி பங்கு தந்தை மற்றும் பங்கு குருக்கள், துறவற சபையினர் அன்பிய குடும்பங்கள் பங்கு மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து தூய ஆரோக்கிய அன்னை தேர் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலமானது பஸ் நிலையம், மார்க்கெட் , காமராஜர் சதுக்கம், ராம்சந்த் பின்பு கோயிலை வந்து அடைந்தது இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


நீலகிரி