ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

74பார்த்தது
தமிழக அரசு பிறப்பித்த ஆலை மூடல் மறுப்பாணை மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் பிறப்பித்த முழு சம்பள உத்தரவு இவற்றின் அடிப்படையில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஸ்டெர்லிங் பயோடெக் எம்பிளாய் யூனியன் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் அரசாணை (நிலை) எண் 31 மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் 16/10/2024-ல் பிறப்பித்த முழு ஊதிய உத்தரவு

தாங்கள் பணிபுரியும் Stening Biotech Limited தொழிற்சாலையை Perfect Day Inc, என்கிற அமெரிக்க நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.
கடந்த 2022 நவம்பர் 17 முதல் பொறுப்பேற்றுக் கொண்ட இந்த நிர்வாகம் சுமார் ஒரு வருட காலத்திற்கு தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்கி வந்தது தமிழக அரசிடம் இந்த நிறுவனத்தை தொடர்ந்து இயக்க முடியாது என்று ஆலை மூடலுக்கு விண்ணப்பித்து விட்டு 15/02/2024 முதல் தொழிலாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த ஊதியத்தை நிறுத்திவிட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி