கோத்தகிரியில் 14 சென்டிமீட்டர் மழை பதிவு மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் 300 மீட்டர் தூரத்திற்கு ஏற்பட்ட மண் சரிவு.
மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரியில் நேற்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய மலைப்பாதையில் உள்ள மேல் தட்ட பள்ளம் பகுதியில் சாலையோரம் மண் சரிவு 300 மீட்டர் தூரத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ள நிலையில் சாலையோரம் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் நெடுஞ்சாலைத்துறை யினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் ஒருபுறம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றன
கனரக மற்றும் பேருந்துகள் வேகமாக செல்வதை தவிர்த்து சாலையில் பயணிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைனால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.