உதகமண்டலம் - Ooty

சமூகவிரோதிகளின் கூடாரமாக ஸ்கேட்டிங் விளையாட்டு திடல்

உதகை சேரிங்கிராஸ் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஸ்கேட்டிங் விளையாட்டு திடலில் உள்ளூர் விளையாட்டு வீரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்ளாத காரணத்தால் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. ஸ்கேட்டிங் திடலில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாகவும் மாறி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. விளையாட்டுத் திடலில் மதுபான பாட்டில்கள் குவிந்து காணப்படுவதால் விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அபாயகரமான மரங்களை வெட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த நிலையில் ஸ்கேட்டிங் திடல் அருகே இருந்த மரங்களை வெட்டி அதன் கிளைகள் அனைத்தும் ஸ்கேட்டிங் திடலில் போடப்பட்டுள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்ள தனியார் திருமண மண்டபத்தில் பயிற்சி பெற்று வருவதாகவும், திருமணங்கள் நடைபெறும் போது பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது எனவும் ஸ்கேட்டிங் வீரர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டு அலுவலர் விளையாட்டு வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

வீடியோஸ்

நீலகிரி
Sep 13, 2024, 07:09 IST/உதகமண்டலம்
உதகமண்டலம்

சமூகவிரோதிகளின் கூடாரமாக ஸ்கேட்டிங் விளையாட்டு திடல்

Sep 13, 2024, 07:09 IST