நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை. தலைவர் மற்றும் துணை தலைவரிடமிருந்து ரூ. 3, 37, 500 பறிமுதல்.
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் வந்ததை தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை டி. எஸ். பி ஜெயகுமார் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் நகராட்சி தலைவர் சிவகாமி மற்றும் துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோரிடம் ரூ. 3, 37, 300 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யபட்டது. முதற்கட்ட விசாரணையில் நகராட்சி தலைவர் சிவகாமி மற்றும் துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோர் 11 ஒப்பந்ததாரர்களுக்கு பொது நிதியில் பணி ஒதுக்கீடு செய்ய 8% கமிஷன் பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு ஆவணங்களை கைபற்றிய லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.