நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் சாலையில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் பாறைகள் விழுந்து வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து மண்சரிவு ஏற்பட்டும் பாதிப்புக்குள்ளானது இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள ஆணை பள்ளம் சடையன் கொம்பை சின்னாளக் கொம்பை போன்ற பழங்குடியின கிராம பகுதிகளுக்கு செல்லும் சாலையில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்தும் பாறைகள் விழுந்தும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது இதனால் பழங்குடியின மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று உணவு பொருட்கள் வாங்ககூட குன்னூர் செல்ல நடந்தே பில்லூர் மட்டம் பகுதிக்கு வந்து பேருந்தில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவே ஆணை பள்ளம் பகுதிக்கு செல்லும் சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.