பணம் வைத்து சூதாட்டம்; ஆறு பேர் கைது
கோவை வேலாண்டிபாளையம் விநாயகர் கோவில் அருகே உள்ள காலி இடத்தில், பணம் வைத்து சூதாடுவதாக சாய்பாபா காலனி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த முகிலேஷ் அலி (29), ஷேக் மனோகர் அலி (31), ஷேக் அஸ்லாம் அலி, ஜியா அலி (34), பிராஜ் அலி (29), ஷேக் ஹபீப் (29) ஆகிய ஆறு பேரையும் சாய்பாபா காலனி போலீசார் நேற்று (அக்.,3) கைது செய்தனர். அவர்கள் ஆறு பேரையும் இன்று (அக்.,4) நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.