கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைசாமி (53). இவர் உக்கடத்தில் உள்ள கோழிக்கறி கடையில் வேலை பார்த்து வந்தார். கோவை ராமநாதபுரத்தில் குழந்தை சாமியின் உறவினர் நேற்று முன்தினம் (செப்.,29) இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டு பின்பு குழந்தைசாமி வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
குழந்தைசாமி உக்கடம் பைபாஸ் சாலையில் உள்ள பள்ளி அருகே சென்ற போது பின்னால் வந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் குழந்தைசாமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன அளிக்காமல் நேற்று (செப்.,30) பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவை மேற்கு புலனாய்வு பிரிவு போலீசார் உடையாம்பாளையம் அசோக் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜு (43) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.