உணவில் அதிகளவில் உப்பு சேர்ப்பது வயிற்று புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது வயிற்று புற்றுநோயின் அபாயத்துடன் தொடர்புடையது. மருத்துவர்கள் கூறும்போது, “உப்பு மட்டுமின்றி, அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சனை, நிலக்கரி, உலோகம் மற்றும் ரப்பர் தொடர்பான பணிகளில் ஈடுபடுவதும் வயிற்று புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.” என்கின்றனர்.