மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

79பார்த்தது
மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி அக்டோபர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெறும் என நேற்று (செப்.,30) அறிவிக்கப்பட்டுள்ளது.

கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்ற சிறு தானிய வகைகள் மக்களால் உணவில் ஓரளவு சேர்த்துக் கொள்ளப்படுகிறது. நகர்ப்புறங்களில் கேழ்வரகு மட்டும் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. இந்த சிறுதானிய வகைகளில் உள்ள சத்துக்களையும், அவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் ரூ. 1, 770 (ரூ. 1, 500 + 18% GST) கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்குபேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர், அலைபேசி எண்- 94885 18268 என்பதில் தொடர்பு கொள்ளலாம் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி