கூடலூர் - Gudalur

தொட்டபெட்டா காட்சி முனையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டமாகும். இம்மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் தற்போது தொடர் விடுமுறை  ஒட்டி உதகையில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளங்களான உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், பைக்காரா படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்களை சுற்றுலாப் பயணிகள்  கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில்  தொடர் விடுமுறை நாளையொட்டி புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தொடபட்ட மலை சிகரத்தில் இருந்து உதகை நகரம், வானுயர்ந்த மரங்கள்  சமவெளி பிரதேசங்கள், இயற்கை அழகை கண்டு ரசித்து செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து தங்களது குடும்பத்தார், உறவினர் மற்றும் நண்பர்களோடு விடுமுறை நாளை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

வீடியோஸ்


நீலகிரி