நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய சிசிடிவி காட்சி பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் உள்ளூர் சுற்றுலா மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென கோரிக்கை.
நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா ஸ்தலமாகும் இங்கு நாள்தோறும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் குறிப்பாக உதகை நகரம் குறுகிய நகரம் என்பதால் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டு பகுதியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 3 கார்களின் சுற்றுலா வந்துள்ளனர்.
அப்போது அங்குள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்துவதற்காக ஆட்டோ ஸ்டாண்ட் முன்பு வாகனங்களை நிறுத்தி உள்ளனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் சையது அப்பாஸ் என்பவர் வாகனங்களை எடுக்குமாறு கூறியுள்ளார்