சுற்றுலாப் பயணிகள் குறைவாக காணப்பட்ட அரசு தாவரவியல் பூங்கா..

84பார்த்தது
வார விடுமுறை நாளான இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குறைந்து காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கூட்டம்.

உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டம் நீலகிரி மாவட்டமாகும். இம்மாவட்டத்திற்கு நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.

குறிப்பாக உதகையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் உதகையில் தொடர்மழை மற்றும் காலநிலை மாற்றத்தால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இந்நிலையில் வார விடுமுறை நாளான இன்று உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.

மேலும் இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தவாறு பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விளையாடி மகிழ்ந்தனர். மேலும் இங்கு உள்ள பேட்டரி காரில் பயணித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் வானுயுர்ந்த மரங்கள் மற்றும் அழகிய இயற்கை காட்சிகளை புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து உற்சாகமடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி