குன்னூர் - Coonoor

உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்ட காரணத்தினால் உதகையில் உள்ள சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் தற்போது நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான கால நிலையின் காரணமாக உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் வரவு அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக இன்று உதகை படகு இல்ல ஏரியில் அதிகமான சுற்றுலா பயணிகள் வடக்கு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர் இதன் காரணமாக படகுகளில் முன்பதிவு செய்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நின்று மோட்டார் படகு மற்றும் மிதி படகில் குடும்பத்துடன் பயணம் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

வீடியோஸ்


நீலகிரி