குற்றவாளிகளை பிடிக்கச் சென்றபோது விபத்து ஏற்பட்டு 2 பெண் காவலர்கள் உயிரிழந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வைத்த குற்றச்சாட்டுக்கு ஆவடி காவல் ஆணையரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. காவல் ஆணையரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேல்மருவத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த இரு பெண் காவலர்களும் அலுவல் நிமித்தமாக செல்லவில்லை எனவும், காவலர்கள் இருவரும் அண்மையில் இருசக்கர வாகனத்தில் லடாக் வரை சென்று வந்தவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.