கோயம்புத்தூர் - Coimbatore

கோவை: கத்தியால் கைகளில் வெட்டிக் கொள்ளும் திருவிழா- வீடியோ

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ஶ்ரீ ராமலிங்க சௌவுடாம்பிகை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் நடைபெறும் கத்தி போடும் திருவிழா இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டு, கோவை சாய் பாபா காலணியில் உள்ள விநாயகர் கோவிலில் காலை கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வேசுக்கோ, தீசுக்கோ என்ற கோஷங்களை எழுப்பினர். இந்த ஊர்வலம் சுமார் 400 ஆண்டுகளாக பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர். வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்த திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக டவுன்ஹாலில் உள்ள ஶ்ரீ ராமலிங்க சௌவுடாம்பிகை அம்மன் கோவிலை வந்தடைந்தது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் இன்று கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசம் அடைந்தனர்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்