கனிமொழி உதவியாளரின் தம்பி எனக் கூறி ரகளை -வீடியோ வைரல்!

56பார்த்தது
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, மது போதையில் இருந்த இளைஞர்கள் கனிமொழியின் உதவியாளரின் தம்பி எனக் கூறி காவல்துறையினரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திபுரம் 100 அடி சாலையில் அக்டோபர் 1 இரவு 1 மணியளவில் போலீசார் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சில இளைஞர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையின் போது, அந்த இளைஞர்கள் மது அருந்தியிருப்பது தெரிய வந்தது. மது போதையில் இருந்த அந்த இளைஞர்கள், தாங்கள் திமுக எம்பி கனிமொழியின் உதவியாளரின் தம்பி என்று கூறி காவல்துறையினரை மிரட்ட முயன்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிலரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி