கோவையில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, வடவள்ளியைச் சேர்ந்த வழக்கறிஞர் தங்கராஜ் என்பவர் மது போதையில் இன்று இருசக்கர வாகனம் ஓட்டி வந்தார்.
ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் தங்கராஜை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் மது அருந்தியிருப்பது தெரிய வந்தது. விசாரணையின் போது, தங்கராஜ் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்தார். போக்குவரத்து காவலர்கள் அவருக்கு அபராதம் விதிக்க முயன்ற போது, தங்கராஜ் அவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, காவலர்கள் தங்கராஜை கைது செய்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், தங்கராஜ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.