கோயம்புத்தூர் - Coimbatore

கோவை: 5 நாட்களில் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கம்!

கோவை விமான நிலையம் கோவை மற்றும் சுற்றியுள்ள ஏழு மாவட்ட மக்களுக்கு சேவை அளித்து வருகிறது. சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி போன்ற வெளிநாடுகளுக்கும் நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 3 வரையிலான 5 நாட்களில் 300க்கும் மேற்பட்ட முறை விமானங்கள் புறப்பாடு மற்றும் தரையிறக்கம் நிகழ்த்தியுள்ளன. விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, அக்டோபர் 30 அன்று 30 விமானங்களில் 8, 688 பேரும், அக்டோபர் 31 தீபாவளியன்று 32 விமானங்களில் 7, 636 பேரும், நவம்பர் 1 அன்று 30 விமானங்களில் 6, 618 பேரும், நவம்பர் 2 அன்று 30 விமானங்களில் 8, 164 பேரும், நவம்பர் 3 அன்று 30க்கும் மேற்பட்ட விமானங்களில் 7, 500க்கும் மேற்பட்டோரும் பயணம் செய்துள்ளனர். இந்த 5 நாட்களில் விமான ஓடுபாதையில் 300க்கும் மேற்பட்ட முறை விமானங்கள் தரையிறங்குதல் மற்றும் புறப்படுதல் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இதனால் விமான கட்டுப்பாட்டு அறை (ATC) மிகவும் பரபரப்பாக செயல்பட்டது. ஒவ்வொரு விமானத்தின் வருகை மற்றும் புறப்பாடு நிகழ்வுகளும் பாதுகாப்பாக கையாளப்பட்டன. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமான நிலைய வளாகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

வீடியோஸ்

கோயம்புத்தூர்
Nov 05, 2024, 08:11 IST/கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்

கோவை: 5 நாட்களில் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கம்!

Nov 05, 2024, 08:11 IST