சர்வதேச அளவில் இந்த ஆண்டுக்கான உலக பட்டினி குறியீடு பட்டியல் வெளியாகியுள்ளது.127 நாடுகள் கொண்ட உலகளாவிய பட்டினி குறியீடு பட்டியலில் இந்தியா 105வது இடத்தைப் பெற்றுள்ளது. உலக பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அண்டை நாடுகளை விட மிகவும் மோசமான இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. மேலும், அதீத பட்டினி நிலவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 42வது இடத்தில் உள்ளது. இது மிகவும் வேதனையான விஷயமாக பார்க்கப்படுகிறது.