மத்திய நிதி அமைச்சர் கருத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

75பார்த்தது
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவைக்கு வந்திருந்தபோது விஸ்வகர்மா என்பது ஒரு ஜாதியும் இல்லை பாரம்பரிய தொழிலும் அல்ல என்று கூறியதற்கு எதிராக தமிழ்நாடு ஐந்தொழில் விஸ்வகர்மா சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, மத்திய நிதி அமைச்சரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய நிதி அமைச்சரின் கருத்து மிகவும் தவறானது என்றும், அதனை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் கூறினார். கருத்தை திரும்ப பெறவில்லை என்றால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், வருகிற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அவர் எச்சரித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி